×

தேர்தல் வாக்காளர் அறிக்கை வெளியீடு

சேலம், ஏப். 16:தமிழக நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை அறிக்கையாக வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், மக்களின் கோரிக்கைகள் அடங்கிய வாக்காளர் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் தமிழ் மனோஜ் பிரசாந்த் என்பவர் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒருங்கிணைந்து, தொகுதி வாரியாக பொதுமக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய வாக்காளர் அறிக்கை தயாரித்துள்ளோம். விவசாயம், கல்வி, சமூகநீதி, நீர்மேலாண்மை, தொழிலாளர் நலன், மருத்துவம், வேலைவாய்ப்பு என அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர்களிடம், இந்த அறிக்கையை வழங்கி, அந்தந்த தொகுதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்படும்,’’ என்றார்.

The post தேர்தல் வாக்காளர் அறிக்கை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu Parliamentary Elections ,Dinakaran ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்