×

தெலுங்குபாளையம், செல்வபுரத்தில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி தீவிர பிரசாரம்

 

தொண்டாமுத்தூர் ஏப்.16: பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி நேற்று தெலுங்குபாளையம், செல்வபுரம் பகுதியில் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். தொடர்ந்து அவர் சென்ற இடங்களில் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசுகையில்,“திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் தொடர்ந்து நமக்கு கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும், எதிர்காலத்தில் தொடர்ந்து உங்களோடு இருந்து பணியாற்றிடவும் நாடாளுமன்ற வாய்ப்பை தர வேண்டும் எதிரணியில் இருக்கக்கூடிய இரண்டு வேட்பாளர்கள் எங்கு வெற்றி பெற்றாலும் அவர் மோடிக்கு ஆதரவாக தான் செயல்படுவார்கள். எனவே, இரண்டு வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் பிரச்னைகளை தீர்க்க என்னை தேடி வர வேண்டியது இல்லை. உங்கள் தொகுதியில் இருந்து பிரச்னைகள் தீர்க்கப்படும். எதிர்காலத்தில் உங்களால் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பின்பு தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் ஒன்றை உருவாக்கி உங்களுக்காக பணியாற்றி உங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன்’’ என்றார்.

பிரச்சாரத்தின்போது, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தொகுதி பொறுப்பாளர் சிந்து ரவிச்சந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன்,பகுதி செயலாளர் கேபிள் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post தெலுங்குபாளையம், செல்வபுரத்தில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி தீவிர பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Easwarasamy ,Telangupalayam ,Selvapuram ,Thondamuthur ,K. Easwarasamy ,Indian Alliance for the Pollachi parliamentary constituency ,Telangupalayam, Selvapuram ,Iswaraswamy ,
× RELATED பராமரிப்பின்றி உதவி கேட்டு பெண், மாற்று திறனாளி கலெக்டரிடம் மனு