×

சிறுமியை பொய் புகார் அளிக்க தூண்டியவருக்கு 4 மாதம் சிறை

 

திருப்பூர், ஏப்.16: திருப்பூரில் கடந்த 2019-ம் ஆண்டு பள்ளி சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையில் தனது மாமா கூறியதால் பொய்யாக பாலியல் தொந்தரவு புகார் கொடுத்ததாக நீதிமன்றத்தில் சிறுமி தெரிவித்தார். விசாரணையிலும் அது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பொய்யாக பாலியல் புகார் அளிக்க தூண்டிய சிறுமியின் உறவினரான போயம்பாளையத்தை சேர்ந்த சங்கர் (38) என்பவர் மீது மாவட்ட மகளிர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடுத்து விசாரித்தது. இதைத்தொடர்ந்து சிறுமியை பொய் பாலியல் புகார் அளிக்க தூண்டிய சங்கருக்கு 4 மாதங்கள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுகந்தி நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

The post சிறுமியை பொய் புகார் அளிக்க தூண்டியவருக்கு 4 மாதம் சிறை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur North Women's Police ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்