×

3,288 நபர்கள் தபால் வாக்கு செலுத்தினர்

திருச்சி, ஏப்.14: நாடாளுமன்ற தோ்தலை முன்னிட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் போலீசார், பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் தோ்தல் செலவினங்களை கண்காணித்து ஒளிப்பதிவு செய்யும் அலுவலா்களுக்காக தபால் வாக்குகள் பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தில் 2வது நாளாக நேற்று தபால் வாக்குகள் செலுத்தினா்.

அதனடிப்படையில் ஏப்.12ம் தேதி திருச்சி மாநகர போலீசார் மற்றும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் தோ்தல் செலவினங்களை கண்காணித்து ஒளிப்பதிவு செய்யும் அலுவலா்கள் என 1,743 நபா்கள் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்தனா். நேற்று நடைபெற்ற தபால் வாக்குப்பதிவில் 1545 நபா்கள் தங்களது வாக்குகளை திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட போலீசார் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான பெட்டியிலும், இதர நாடாளுமன்ற தொகுதிகளை சோ்ந்த போலீசார் இதர பாராளுமன்ற தொகுதிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தினா். இதுவரை 3288 நபா்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனா்.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களில் தங்களது தபால் வாக்கினை அளிக்க தவறியவா்கள் ஏப்.15 அன்று தங்களது வாக்குகளை செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க தவறியவா்கள் ஏப்.15 அன்று மாநகர காவல் துறையினா், மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் மற்றும் புறநகா் போலீசார் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் தோ்தல் செலவினங்களை கண்காணித்து ஒளிப்பதிவு செய்யும் அலுவலா்கள் இம்மையத்தில் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என மாவட்ட தோ்தல் அலுவலா் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தொிவித்துள்ளார்.

The post 3,288 நபர்கள் தபால் வாக்கு செலுத்தினர் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சியில் இருந்து வெளிநாடு செல்ல...