×

சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த மழை

சேந்தமங்கலம், ஏப்.14: புதன்சந்தை அருகே திடீர் சூறை காற்றுடன் பெய்த மழையால் சேகோ ஆலையின் மேல் கூரைகள் சாய்ந்தது. புதுச்சத்திரம் வட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். விவசாய கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. போதிய மழை இல்லாததால், ஆடு, மாடுகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தஞ்சை, திருச்சி, துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், கால்நடைகளுக்கு வைக்கோலை விலைக்கு வாங்கி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை புதன்சந்தை, செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் திடீர் மழை பெய்தது. சுமார் 20 நிமிடம் நீடித்த மழையால், இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. சூறைக்காற்று வீசியதில், செல்லப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஜவ்வரிசி தயாரிக்கும் சேகோ ஆலையின் மேற்கூரைகள் கீழே சரிந்து விழுந்தது. மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து கீழே விழுந்தது.

The post சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த மழை appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Sago ,Budhanshandy ,Puduchattaram ,Tornado ,Dinakaran ,
× RELATED சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம்