×

மனைவியை கழுத்தை அறுத்து கொன்று கணவன் தற்கொலை

நாமக்கல்: நாமக்கல் பரமத்தி ரோடு கொங்கு நகரைச் சேர்ந்தவர் மனோகரன் (55). இவரது மனைவி அனிதா (47). இவர்களின் மகன் ராகுல் (25), பி.இ., படித்துள்ளார். ஓமன் நாட்டில் இன்ஜினியராக வேலை செய்து வந்த மனோகரன், கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்தார். மேலும் அவர் பெற்றோருக்கு சொந்தமாக ஒரு வீடு கட்டி கொடுத்துள்ளார். ஆனால், இவர் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இதனால், கணவன், மனைவி நேற்று முன்தினம் இரவில் ஏற்பட்ட தகராறு, நேற்று அதிகாலை வரை நீடித்துள்ளது. காலை 5 மணியளவில், தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த மனோகரன், மனைவி அனிதாவை சரமாரியாக தாக்கி, தலையை சுவற்றில் மோதியுள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார். அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத மனோகரன், தன்னிடம் இருந்த சிறிய கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர், வீட்டு குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

The post மனைவியை கழுத்தை அறுத்து கொன்று கணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Manokaran ,Kongu Nagar, Paramathi Road, Namakkal ,Anita ,Rahul ,B.E. Manokaran ,Oman ,Dinakaran ,
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!