×

வாழை கன்று நேர்த்தி குறித்து செயல் விளக்கம்: விவசாயிகளுடன் வேளாண் மாணவிகள் களப்பயிற்சி

 

திருச்சி. ஏப். 13: திருச்சி அருகே உள்ள திருப்பராய்த்துறையில் சமுதாய பண்ணைப் பள்ளி திட்டத்தின் சார்பாக விவசாயிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் விவசாயி பாலாமணி வாழை உற்பத்தி பற்றி மாணவிகளுக்கும் உடனிருந்த விவசாயிகளுக்கும் எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் தஞ்சாவூர் வேளாண் மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் .

மேலும் மாணவிகள் செயல் விளக்க வரைப்படம், வாழைகன்று நேர்த்தி மற்றும் பனானா சக்தி (பயிரூக்கி)ஆகியவற்றை பற்றி விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர். அவர்களிடம் தஞ்சாவூர் வேளாண் கல்லூரி மாணவிகள் ரஞ்சிதா, ரோஷினி, சாய் லட்சுமி, ஷாலினி, சிந்து, சுஜிதா,சுமிப்ரீத்தி,சன்மதி, சுவேதா, தாமரை, திரிஷா மற்றும் வைத்தீஸ்வரி ஆகியோர் மண் பரிசோதனை செயல்முறை பற்றியும் விளக்கம் அளித்தனர்.

The post வாழை கன்று நேர்த்தி குறித்து செயல் விளக்கம்: விவசாயிகளுடன் வேளாண் மாணவிகள் களப்பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Tiruparayukh ,Thanjavur ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...