×

அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு

விராலிமலை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சூரியூர் நெடும்புலியை சேர்ந்தவர் கணேசன் மகன் பாலாஜி(19). புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மேட்டுச்சாலையில் இயங்கி வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான மதர்தெரஸா கல்வியியல் கல்லூரியில் உடற்கல்வி மற்றும் அறிவியல் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில், கல்லூரியில் நடைபெற உள்ள ஆண்டு விழாவிற்காக கடந்த 10ம் தேதி கல்லூரி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாலாஜி, திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்டு மாணவர்கள், சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாலாஜி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து மாணவனின் தந்தை கணேசன், மகன் சாவில் மர்மம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என போலீசில் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து இலுப்பூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Viralimalai ,Ganesan ,Balaji ,Paramakkudi ,Suriyur ,Nedumbuli ,Ramanathapuram district ,former ,minister ,C. ,Vijayabaskar ,Mother Teresa College of Education ,
× RELATED பொதுமக்கள் மகிழ்ச்சி விராலிமலை அருகே...