×

முகத்தில் சுருக்கமா கொய்யா போதுமே…

நன்றி குங்குமம் தோழி

பெண்களுக்கு சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக சருமத்தில் சின்ன சுருக்கம் இருந்தாலும், அவர்களின் மனம் வாட்டமடைந்துவிடும். சரும சுருக்கத்திற்கு சிறந்த இயற்கை மருந்து கொய்யா பழம். கொய்யாவில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது. இது ரத்த சர்க்கரையை நிர்வகிக்கும். ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும்.
கொய்யாவில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைகோபீன் சருமத்தை இளமையுடன் பாதுகாக்கிறது. இதில் வைட்டமின்-ஏ, லைகோபீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்கள் உள்ளது. தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது.

பன்னீர் – 1 மேசைக்கரண்டி, தேன் – 1 மேசைக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் – 1 சிட்டிகை, பூ வாழைப்பழம் – 1, எலுமிச்சை சாறு – 1/2 பழம், ஆலிவ் எண்ணெய் – 1 ஸ்பூன். முதலில் பன்னீரில், தேன் மற்றும் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலக்குங்கள். இந்தக் கலவையை முகத்தில் பூசி காய்ந்ததும் நன்கு கழுவுங்கள். அதன் பிறகு பூ வாழைப்பழத்தை மசித்து முகத்தில் மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். கடைசியாக ஆலிவ் எண்ணெயில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து அந்தக் கலவையை முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவவும். இதனை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும், சுறுக்கங்கள் நீங்கி அழகோடு காணப்படும்.

– கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.

The post முகத்தில் சுருக்கமா கொய்யா போதுமே… appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED கிச்சன் டிப்ஸ்