×

வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

 

பெரம்பலூர், மார்ச் 29: பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் கல் லூரி மாணவ,மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரிலுள்ள பெரம் பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 18 வயது நிரம்பிய அனைவ ரும் 100 சதவீதம் வாக்க ளிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின் படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடைபெறவுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களின் வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண் டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து, நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், குரும்பலூர் பாரதிதாசன் கலை மற்றும்அறிவியல் கல்லூரி மற்றும் தந்தை ரோவர் பொறியியல் கல்லூரிக ளைச்சேர்ந்த 300க்கும் மேற் பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்ட வாக்கா ளர் விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அப்போது மாணவ, மாணவிகள் தங்களது நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத் தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தேர்தல் விழிப்புணர்வு பணிக்கான ஒருங்கிணைப்பாளர் கோபால், கல்லூரி முதல்வர் மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Kal Luri ,Perambalur Government Arts and Science ,Kurumbalur District ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி