×

10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு

ஈரோடு,மார்ச் 29: ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 26ம் தேதி துவங்கியது. இத்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 8ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை 116 மையங்களில் 26,683 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களும் எழுதி வருகின்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் ஈரோடு ஜேசிஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, ரங்கம்பாளையம் கொங்கு மெட்ரிக் மேல்நிலை பள்ளி, கோபி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளி, அந்தியூர் மங்களம் மேல்நிலை பள்ளி மையத்தில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.

விடைத்தாள் திருத்துவதற்காக ஈரோடு ஈங்கூர் ஸ்ரீ கங்கா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் 2 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் தேதி இதுவரை அறிவிக்கப்பட வில்லை. அனைத்து தேர்வுகளும் முடிந்த பின் ஒன்றோடு ஒன்று விடைத்தாள்கள் பரிமாற்றம் செய்து, விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படும். விடைத்தாள் திருத்தும் மையங்களில் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டு, மதிப்பெண் வழங்கியவுடன் அவற்றை கணினி மூலம் ஆன்லைனில் பதிவு செய்யவும் மற்றும் அங்கு தேவையான அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி:...