×

உடையார்பாளையத்தில் வடபத்திர காளியம்மன் வீதி உலா

ஜெயங்கொண்டம், மார்ச் 28: உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகில் அருள் பாலித்து வரும் வடபத்ர காளியம்மன் கோவில் உற்சவ வீதி உலா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த வருடம் 71ம் ஆண்டு உற்சவ வீதி உலா நேற்று துவங்கியது. நேற்று கோவிலில் துவங்கிய வீதி உலா ஒவ்வொரு வீதியாக சென்று பொது மக்களுக்கு பக்தர்களுக்கும் அருள் வழங்கி மீண்டும் வரும் ஏப்ரல் நான்காம் தேதி மீண்டும் அம்மன் கோவிலை வந்தடையும். ஒவ்வொரு நாட்களும் வீதி வீதியாக செல்லும்போது பொதுமக்கள் பக்தர்கள் சுவாமிக்கு தீபம் காட்டி அம்மனிடம் அருள் பெற்று வருவது வழக்கம். இந்த வருடம் நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடபத்திர காளியம்மனை அழைத்து வீதி உலா சென்றனர். இதற்காக வடபத்திர காளியம்மன் செவ்வாடை அணிந்து காளியம்மனின் உருவம் அணிந்து ஒரு பக்தர் செல்வார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக தலைவர் குருநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் விழா கமிட்டியினர் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

The post உடையார்பாளையத்தில் வடபத்திர காளியம்மன் வீதி உலா appeared first on Dinakaran.

Tags : Vadabhatra Kaliamman Road Walk ,Wodiyarpalayam ,Jayangondam ,Vadabhadra Kaliyamman Temple ,Utsava Vethi Ula ,Vadiyarpalayam Veliya Pilliyar Temple ,Utsava Road Walk ,Vadapathra Kaliamman Road Walk ,Wodeyarpalayam ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...