×

ஈரோட்டில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சியினர் மீது 5 வழக்குகள் பதிவு

 

ஈரோடு, மார்ச் 26: ஈரோட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதாக அரசியல் கட்சியினர் மீது இதுவரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, அரசியல் கட்சியினர் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஈரேடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள், கொடி கம்பங்கள், சுவர் விளம்பரங்கள் வைத்தவர்கள், முன் அனுமதியின்றி கூட்டம் நடத்துபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், கடந்த 16ம் தேதி முதல் நேற்று வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கொமதேக, அதிமுக, திவிக போன்ற 3 கட்சிகள் மீதும், அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டியதாக 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஈரோட்டில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சியினர் மீது 5 வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...