×

ஆட்டோவில் மதுபாட்டில் கடத்தி வந்த 3 பெண்கள் கைது

நாகை: காரைக்காலில் இருந்து நாகைக்கு ஆட்டோவில் மதுபாட்டில் கடத்துவதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில் நாகூர் புதிய பேருந்து நிலையம் அருகில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்தின்பேரில் ஆட்டோ அருகே நின்ற 3 பெண்களை பிடித்து விசாரித்தனர். இதில், நாகை மருந்து கொத்தளம் தெருவை சேர்ந்த தீபா(34), முத்துலட்சுமி(40), அதிர்ஷ்டகுமாரி(49) என்பதும், காரைக்காலில் இருந்து ஆட்டோவில் நாகைக்கு மதுபாட்டில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரை கைது செய்ததுடன் 110 லிட்டர் மதுபாட்டில், ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post ஆட்டோவில் மதுபாட்டில் கடத்தி வந்த 3 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Nagai ,Independent Police ,Karaikal ,Naga ,Madhubat ,Nagore ,Dinakaran ,
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு