×

குபேரன் அனுக்கிரகத்தை பெறுவதற்கான வழிபாடு முறை!!

* கோட்சாரத்தில் சந்திரனோடு வியாழன் சேர்ந்திருக்கும் போது வரும் வியாழக்கிழமை – பெளர்ணமி அன்று லட்சுமி குபேரபூஜை செய்து குபேர சம்பத்தை பெறலாம்.

* மாதத்தின் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் வீட்டில் முழுச்சந்திர ஒளி பிரதிபலிக்கின்ற இடத்தில் குபேர கோலமிட்டு, அதன் மேல் வாழை இலை வைத்து, அதில் முகம் பார்க்கும் கண்ணாடி, மல்லிகைப்பூ நன்கு சூட வைத்து, ஆற வைத்த பசும்பால், கனிகள், பன்னீர் படையலிட்டு சந்திர ஹோரை, வியாழ ஹோரை, புதன் ஹோரை அல்லது சுக்கிர ஹோரையில் வழிபாடு செய்ய வேண்டும். பின்பு, சந்திரனின் ஒளியில் அங்கே சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் உங்களுக்கான தனவரவு வருவதை இயற்கை உங்களுக்கு வழிகாட்டும்.

* சித்திரை மாதம், அமாவாசை அடுத்து வரும் வளர்பிறை திருதியை அன்று வருவதுதான் அட்சய திருதியை. அன்று உங்கள் வீட்டில் குபேர பூஜை செய்து பூஜைக்கு வருபவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். அன்று யார் தானம் கொடுக்கிறார்களோ அவர்கள் வளர்வார்கள் என்பது ஐதீகம். அப்பொழுது குபேரனின் அனுக்கிரகம் நமக்கு கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்கிறார்கள். இந்நாளில்தான் தன் வீட்டில் உணவிற்கே வழி ஏதும் இல்லாத பொழுது, தன் வீட்டிற்கு பசியோடு வந்த ஆதிசங்கரருக்கு அந்த வீட்டுப் பெண் தன் வீட்டில் மீதமிருந்த லட்சுமியின் அம்சமாகிய நெல்லிக்கனியை தானம் செய்தாள். அந்த நெல்லிக்கனியை பார்த்த போதுதான் அந்த வீட்டின் ஏழ்மையையும் அந்தப் பெண்ணின் நல் மனதையும் புரிந்துகொண்ட ஆதிசங்கரர், லட்சுமியை நோக்கி கனகதாரா ஸ்தோத்திரத்தை இயற்றுகிறார். அந்தப் பெண்மணியின் வீட்டில் பொன்னும் மணியும் வாரி அருள் செய்தாள் மகாலட்சுமி என்கிறது புராணம்.

The post குபேரன் அனுக்கிரகத்தை பெறுவதற்கான வழிபாடு முறை!! appeared first on Dinakaran.

Tags : Jupiter ,Moon ,Lakshmi ,
× RELATED வரதட்சணையின்றி திருமணம் அமையும் சண்டாள யோகம்