×

ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைக்கும் இந்திய ஆராய்ச்சி அறிஞர்கள் மாநாடு:சென்னை ஐஐடியில் தொடக்கம்

சென்னை: பல்வேறு துறைகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைக்கும் இந்திய ஆராய்ச்சி அறிஞர்கள் மாநாட்டை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைக்கும் விதமாக அகில இந்திய ஆராய்ச்சி அறிஞர்கள் மாநாட்டை சென்னை ஐஐடி நேற்று தொடங்கியது. வரும் 7ம் தேதி வரை நடக்கிறது.

இதை சென்னை ஐஐடி ஆராய்ச்சி விவகார குழுமம் நடத்துகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில், இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டு பேசுகையில், ஆராய்ச்சி, உதவித்தொகை, புதுமைக் கண்டுப்பிடிப்புகள், தொழில் முனைவோர் ஆகியவை இந்தியாவில் விவாதிக்கப்படும் அம்சமாக இருப்பதால், இது இனி வெளிப்புற கருத்துக்களாக அமையாது.

தற்போது புத்தொழில் நிறுவனங்கள் தொடங்குவது இயல்பான ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு நிறுவனமும், கல்லூரியும், பல்கலைக்கழகமும் மற்றும் இளைஞர்களும், தனது எதிர்காலத்தைப் பற்றி கனவு காணும்போது, வேலை பெறுதல், ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றுதல் அல்லது கல்விக்காக வெளிநாடு, உள்நாட்டில் பயணிப்பது போன்ற வாய்ப்புகளில் ஒன்றை பெறுகிறார்கள் என்றார்.

The post ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைக்கும் இந்திய ஆராய்ச்சி அறிஞர்கள் மாநாடு:சென்னை ஐஐடியில் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Indian Research Scholars Conference ,IIT Chennai ,CHENNAI ,All India Research Scholars Conference ,IIT ,
× RELATED சில்லி பாயின்ட்…