×

பள்ளபாளையம் ஊராட்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

 

உடுமலை, மார்ச் 5: உடுமலை ஒன்றியம், பள்ளபாளையம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமில், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளருமான மகேந்திரன் கலந்து கொண்டு சொட்டு மருந்து வழங்கினார். இந்நிகழ்வில் உடுமலை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் போகநாதன், தளி பேரூர் செயலாளர் ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி நந்தகுமார், ஒன்றிய துணை செயலாளர் செந்தில், சார்பு அணி நிர்வாகிகள், கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பள்ளபாளையம் ஊராட்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம் appeared first on Dinakaran.

Tags : Polio ,Drip Camp ,Pallapalayam Panchayat ,Udumalai ,Madathikulam Legislative Assembly ,District ,Corporation ,Mahendran ,Anganwadi Center ,Pallapalayam ,Panchayat Anganwadi ,Udumalai Union ,
× RELATED 959 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்