×

வடசென்னை பகுதிகளில் குட்கா விற்ற 4 பேர் பிடிபட்டனர்

பெரம்பூர்: புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் குட்கா விற்ற கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி (27) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.2000 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், ஓட்டேரி வெங்கடம்மாள் சமாதி சாலையில் குட்கா விற்ற அண்ணாதுரை (55) என்பவரை கைது செய்து, ரூ.1000 மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.

வியாசர்பாடி மேகசின்புரம் மதுபான கடை அருகே குட்கா விற்ற வியாசர்பாடி சி.கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (25) என்பவரை கைது செய்தனர். பேசின் பிரிட்ஜ் பவுடர் மில்ஸ் சாலையில் குட்கா விற்ற புளியந்தோப்பு நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (19) என்பவரை கைது செய்து, 200 கிராம் கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post வடசென்னை பகுதிகளில் குட்கா விற்ற 4 பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.

Tags : Gutka ,North Chennai ,Perambur ,Asaithambi ,Kannikapuram ,Pulyanthopu Aduthotti ,Otteri Venkatamal Samadhi Road ,Dinakaran ,
× RELATED குட்கா விற்ற வாலிபர் கைது