×

நாடாளுமன்றத் தேர்தலில் 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் 3 லட்சத்து 32,000 பணியாளர்கள் பணியில் ஈடுபடுவர் : சத்ய பிரதா சாகு

டெல்லி : நாடாளுமன்றத் தேர்தலில் 68ஆயிரம் வாக்குச் சாவடிகளில் 3 லட்சத்து 32,000 பணியாளர்கள் பணியில் ஈடுபடுவர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “மக்களவை தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தேர்தல் தேதி அறிவித்த பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பப்படும். தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்றத் தேர்தலில் 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் 3 லட்சத்து 32,000 பணியாளர்கள் பணியில் ஈடுபடுவர் : சத்ய பிரதா சாகு appeared first on Dinakaran.

Tags : Satya Pratha Sahu ,Delhi ,Chief Electoral Officer ,Tamil Nadu ,Satya Prada Chagu ,Makkalavai ,Satya Pratha Saku ,
× RELATED 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில்...