×

புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி எங்கே?.. போலீசாரை எதிர்த்து கிழக்கு கடற்கரை சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதில் அலட்சியம் காட்டும் போலீசாரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி சோலைநகா் பாடசாலை வீதியைச் சோ்ந்தவா் நாராயணன். இவரது 10 வயது மகள் ஆர்த்தி அங்குள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை தனது வீட்டின் அருகே விளையாடச் சென்றவா் அதன்பின் வீடு திரும்பவில்லையாம்.

இதையடுத்து, அவரது பெற்றோர், உறவினா்கள் மற்றும் சிறுமியின் தோழிகளின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மாயமான சிறுமியைத் தேடி வந்தனர். மேலும், சோலைநகர் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த அனைத்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் சிறுமி சோலைநகரில் இருந்து வெளியே செல்லும் காட்சி இடம்பெறவில்லை. பின்னர் போலீசார் அப்பகுதியை சுற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி ஆர்த்தி குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், போலீசார் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டி சோலைநகர் பொதுமக்கள் இன்று முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி. லட்சுமி, இன்று மாலைக்குள் குழந்தையை கண்டுபிடித்து தருவதாக கூறிய நிலையில் சோலைநகர் மக்கள் கலந்து சென்றனர். இந்த அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி எங்கே?.. போலீசாரை எதிர்த்து கிழக்கு கடற்கரை சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,East Coast Road ,Chondav Narayanan ,Puducherry Cholainaka School Road ,Aarti ,
× RELATED சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்