×

சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் சோதனை

சென்னை: சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சலில் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு பள்ளியில் போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர்.

கெருகம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக இமெயிலுக்கு குறுந்தகவல் வந்தது. பள்ளி நிர்வாகம் மாங்காடு போலீசில் அளித்த புகாரை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். கடந்த 1ம் தேதி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இதே பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து தீவிர சோதனை நடைபெற்றது. இன்று இரண்டாவது முறையாக அதே பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர், மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இதே போல் கோவையில் வடவள்ளி பகுதி அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து பள்ளியில் போலீசார் சோதனை நடத்தினர். வெடிகுண்டு ஏதும் சிக்காத நிலையில் மாணவர்களை முழுமையாக பரிசோதித்தபின் பள்ளிக்குள் அனுப்பப்பட்டனர்.

The post சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kerugambakkam ,Mangadu, Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...