×

பிரதமருக்கு எதிராக இன்று கருப்புக்கொடி: காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக இன்று கருப்புக்கொடி காட்டப்படும் என்று காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில காங். தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பிரதமர் மோடி எங்கு சென்றாலும் காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும். குஜராத் மீனவர்களுக்கு ஒரு நீதி, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஒரு நீதியை கடைப்பிடிக்கிறார் பிரதமர் மோடி. மீனவர்கள் பாதுகாப்பில் பிரதமர் மோடி பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பிலும் போராட்டம் நடத்தப்படும் என்று அதன் தலைவர் ரஞ்சன் குமார் அறிவித்துள்ளார்.

The post பிரதமருக்கு எதிராக இன்று கருப்புக்கொடி: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : PRIME ,MINISTER ,Chennai ,State Cong ,Congress ,Kangxi ,Chengalpattu ,Modi ,PM ,Tamil Nadu ,
× RELATED நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி!:...