×

சேலத்தில் 98.7 டிகிரி வெயில்

சேலம், மார்ச் 4: சேலம் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக, 99 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. தற்போது, வறண்ட வானிலையே காணப்படுகிறது. நேற்று முன்தினம் 98.7டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவானது. நேற்று 98.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

வெப்ப நிலை அதிகரித்து வருவதால், மதிய நேரங்களில் முக்கிய கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக, சேலத்தில் பழச்சாறு கடைகள், தர்பூசணி கடைகள், இளநீர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதிகப்படியான உஷ்ணத்தால் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறி, விரைவிலேயே களைப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க மக்கள் பழச்சாறு, இளநீர் குடித்து தாக்கத்தை தணித்து வருகின்றனர்.

The post சேலத்தில் 98.7 டிகிரி வெயில் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem district ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!