×

பிளஸ்1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

சேலம், மார்ச் 4: சேலம் மாவட்டத்தில் 151 மையங்களில் இன்று தொடங்கும் பிளஸ் 1 பொதுத்தேர்வை 38,257 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு எழுதுகின்றனர். தமிழகத்தில் நடப்பாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் இன்று (4ம் தேதி) தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 8.20 லட்சம் பேர் எழுதுகின்றனர். அதன்படி சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 321 பள்ளிகளைச் சேர்ந்த 17,955 மாணவர்கள், 20,302 மாணவிகள் என மொத்தம் 38,257 பேர் பிளஸ் 1 தேர்வெழுதுகின்றனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 151 பள்ளிகளில் தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இம்மையங்களில் மாணவர்களுக்கான குடிநீர், இருக்கை, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், தேர்வுப்பணிக்காக வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், 18 பறக்கும் படையினர், 150 நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் துணை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், 151 தேர்வுப் பணியாளர்கள் என பல்வேறு நிலைகளில் 3,500க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று தொடங்கும் பிளஸ் 1 பொதுத்தேர்வு வரும் 25ம் தேதி நிறைவடைகிறது.

The post பிளஸ்1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!