×

வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்தால் கலவரம் வெடிக்கும் : உத்தவ் தாக்கரே காட்டம்

மும்பை: மும்பையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த உத்தவ் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: பாஜ தனது 195 வேட்பாளர்களின் பெயரை அறிவித்திருக்கிறது. அதில் ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் சிக்கிய கிருபா சங்கர் சிங் பெயர் உள்ளது. ஆனால் நிதின் கட்கரி பெயர் இடம்பெறவில்லை. பாஜவில் மோடி, அமித்ஷாவுக்கு முன்பு நாங்கள் பாஜவில் நிதின் கட்கரி பெயரை தான் அதிகம் கேட்டிருக்கிறோம். பாஜவின் விசுவாசி அவர். அத்தகைய தலைவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது. இது தான் இன்றைய பாஜ.

ஜனநாயகத்தில் முக்கிய அங்கம் வகிப்பது மக்கள் தான். மக்கள் புரட்சியை பற்றி பேசுகிறார்கள். ஆனால் புரட்சி என்பது மக்களால் செய்யப்படுவது தானே தவிர தலைவர்களால் அல்ல. கட்சிகளை உடைத்து எதிர்க்கட்சியினரை சிறையில் அடைத்து நடத்தும் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது. வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்து அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் கலவரம் வெடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

The post வாக்கு இயந்திரங்களில் மோசடி செய்தால் கலவரம் வெடிக்கும் : உத்தவ் தாக்கரே காட்டம் appeared first on Dinakaran.

Tags : Uddhav Thackeray Kattam ,Mumbai ,Uddhav Thackeray ,Shiv Sena ,BJP ,Krupa Shankar Singh ,
× RELATED ஏக்நாத் தலைமையில் செயல்படுவது...