×

துப்பாக்கி சண்டையில் போலீஸ், நக்சலைட் பலி

கன்கர்: கன்கர் மாவட்டம், சோட்டே பெத்தியா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஹிடூர் கிராமத்துக்கு அருகிலுள்ள காட்டு பகுதிக்கு பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நேற்று ரோந்து சென்றனர்.

இதையடுத்து, மாநில போலீசின் மாவட்ட ரிசர்வ் படை(டிஆர்ஜி), பஸ்தார் பைட்டர்ஸ் ஆகிய மாநில போலீஸ் படை மற்றும் பிஎஸ்எப் படை வீரர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு சென்றனர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி நக்சலைட்டுகள் சரமாரியாக சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிசண்டை நடந்தது. இந்த சண்டையில்,போலீஸ்காரர் மற்றும் ஒரு நக்சலைட் ஆகியோர் உயிரிழந்தனர்.

The post துப்பாக்கி சண்டையில் போலீஸ், நக்சலைட் பலி appeared first on Dinakaran.

Tags : Kanker ,Chote Betya Police Station, Kankar District ,Hidur ,Dinakaran ,
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18...