×

வரும் 13ம் தேதி வரை அடிக்கல் நாட்டுவதில் பிரதமர் பிசி; மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தாமதம்?

புதுடெல்லி: மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி அடுத்தடுத்து நாடு முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதில் தீவிரமாக இருக்கிறார். ஒரே மாநிலத்துக்கு பல முறை செல்கிறார். பிரதமர் அடிக்கல் நாட்டும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுமா? அல்லது தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற சும்மா நடத்தப்படும் விழாக்களா? என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கு பதில் கிடைக்காத நிலையில் அடுத்த 10 நாட்களுக்கு அதாவது வரும் 13ம் தேதி வரையில் 12 மாநிலங்களில் அடிக்கற்களை நாட்டுவதில் பிரதமர் மோடி ரொம்ப பிசியாக இருப்பார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், காஷ்மீர், அசாம், அருணாச்சல், உ.பி, குஜராத், ராஜஸ்தான், டெல்லி என்று மோடி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

வரும் 13ம் தேதி வரை பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால்,மக்களவை தேர்தல் அட்டவணை அறிவிப்பு தாமதமாகலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014ல் மார்ச் மாதம் 5ம் தேதியே மக்களவை தேர்தல் அட்டவணை வெளியானது. ஆனால், 2019ல் மார்ச் 10ல்தான் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த ஆண்டு மேலும் தாமதமாக தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

The post வரும் 13ம் தேதி வரை அடிக்கல் நாட்டுவதில் பிரதமர் பிசி; மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு தாமதம்? appeared first on Dinakaran.

Tags : PC ,Lok Sabha ,NEW DELHI ,Modi ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...