×

உடுமலை அருகே ஒன்றிய அரசை கண்டித்து கருத்தரங்கு

 

உடுமலை, மார்ச் 4: உடுமலை அருகே மடத்துக்குளம், தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஒன்றிய அரசின் விரோத கொள்கைகளை விளக்கி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுகா தலைவர் ராஜரத்தினம் தலைமை தங்கினார். தாலுகா பொருளாளர் வெள்ளியங்கிரி வரவேற்றார்.

மாநில செயலாளர் சாமி நடராசன், தாலுகா செயலாளர் வீரப்பன், திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவர் ஜெயராம கிருஷ்ணன், திமுக மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர்குமார், தலைவர் மதுசூதனன், பாலதண்டபாணி ஆகியோரும்,

தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம், சிவராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மடத்துக்குளம் பேரூராட்சி தலைவர் கலைவாணி மடத்துக்குளம் திமுக பேரூராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், திருப்பூர் வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் சக்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் உறுப்பினர்கள், திமுகநிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

The post உடுமலை அருகே ஒன்றிய அரசை கண்டித்து கருத்தரங்கு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Udumalai ,Tamil Nadu Farmers' Association ,Madathikulam ,Taluka ,President ,Tamil Nadu Farmers Association ,Rajaratnam ,
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...