×

வெள்ளக்கோவிலில் குப்பையில் திடீர் தீ

 

காங்கயம், மார்ச் 4: வெள்ளக்கோவில், திருச்சி ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பழைய மயானம் உள்ளது, இந்த மயான இடத்தில் தற்போது பழைய குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை கொட்டி வருகின்றனர். இதனால் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது, இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

நேற்று திடீரென கழிவு பொருட்கள் மற்றும் குப்பையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை அறிந்த பொதுமக்கள் வெள்ளக்கோவில் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் யாருக்கு எவ்வித சேதமோ பாதிப்போ இல்லாமல் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.

The post வெள்ளக்கோவிலில் குப்பையில் திடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Vellakovil ,Kangayam ,Govt High School ,Vellakovil, Trichy Road ,
× RELATED காங்கயம் அருகே தொன்று தொட்டு நடக்கும்...