×

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 72 மகளிருக்கு இருசக்கர வாகனங்கள்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

திருவொற்றியூர்: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 72 மகளிருக்கு இருசக்கர வாகனம் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா என்ற தலைப்பில் திசைகள் நான்கும் புகழ்பாடும் திராவிட மாடல் நமை தாங்கும் என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் கலைவாணர் அரங்கில் முதல்வர் பிறந்தநாள் விழா நடந்தது.

விழாவில், 520 திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, 500 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, 72 மகளிருக்கு இருசக்கர வாகனங்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் காந்தி, அன்பில் மகேஷ்பொய்யாமொழி, தயாநிதி மாறன் எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், மேயர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 72 மகளிருக்கு இருசக்கர வாகனங்கள்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chennai East District DMK ,Minister ,Udayanidhi Stalin ,Tiruvottiyur ,Chief Minister ,Tamil Nadu ,M.K.Stal ,
× RELATED மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!!