×

சாமளாபுரம் தேர்வு நிலை பேரூராட்சியில் ரூ.4.25 கோடியில் 24 புதிய திட்டப்பணி

திருப்பூர், மார்ச் 3: வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றும் என, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் செல்வராஜ் எம்எல்ஏ பேசினார்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி அருகே, அண்ணா திடலில் நேற்று இரவு நடந்தது. இதற்கு நகர செயலாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். வார்டு செயலாளர்கள் ஜெகதீசன், வடிவேல் ஆகியோர் வரவேற்று பேசினர். இதில் சிறப்பு விருந்தினராக மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் மகேந்திரன், வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ, பூண்டி நகராட்சி தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் செல்வராஜ் எம்எல்ஏ பேசியதாவது: தமிழகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து துறைகளும் வளர்ச்சி பெற்று வருகின்றன. தொழில் வளர்ச்சியும் மேம்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. இந்த தேர்தலில் சட்டமன்ற தேர்தலை போலவே, மகத்தான வெற்றியை திமுக பெரும். 40 தொகுதிகளையும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்றும். அந்த அளவிற்கு தமிழக மக்களுக்கு ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். வருகிற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு எம்எல்ஏ செல்வராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நகர துணைச்செயலாளர்கள் மூர்த்தி, பத்மசாந்தி, நகர பொருளாளர் அப்பாஸ், கூடுதல் துணை செயலாளர் ராஜன், அவைத்தலைவர் நடராஜன், பொருளாளர் சுவாமிநாதன், துணை செயலாளர்கள் குமார், சேகர், நந்தினி, கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் நம்பி மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், மாணிக்கமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post சாமளாபுரம் தேர்வு நிலை பேரூராட்சியில் ரூ.4.25 கோடியில் 24 புதிய திட்டப்பணி appeared first on Dinakaran.

Tags : Samalapuram ,Tirupur ,DMK ,Chief Minister ,M.K. Selvaraj ,MLA ,Stalin ,Tamil ,Nadu ,Samalapuram Municipal Corporation ,Dinakaran ,
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...