×

ஆயிரம் வாழைகளை வெட்டி பெண்கள் மீது தாக்குதல்

மேட்டூர், மார்ச். 3: சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் உப்புகல்லூரை சேர்ந்தவர் வீரப்பன் மனைவி கண்ணம்மாள் (80). இவரது பேத்தி ஆனந்தி (12). இருவரும் காயங்களுடன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கண்ணம்மாளின் மகன் பழனிசாமி கூறுகையில், ‘எங்களது விவசாய நிலத்தில், வாழை பயிரிட்டு இருந்தோம். தவசிராஜா என்பவர், வாழை தோட்டத்தில் புகுந்து ஆயிரக்கணக்கான வாழை மரங்களை வெட்டி சேதப்படுத்தியுள்ளார். இதை தடுத்த எனது தாய் மற்றும் மகளை தாக்கியுள்ளார்’ என்றா்ர். இதுகுறித்து தவசிராஜா கூறுகையில், ‘கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, நில உரிமையாளரிடம் இருந்து கிரயம் பெற்று, வாழை நடவு செய்து இருந்தேன். வாழை நோய் தாக்கியதால், அதனை அழித்து விட்டு சோளம் விதைத்துள்ளேன். கண்ணம்மாள், ஆனந்தி ஆகியோருக்கு எப்படி காயம் ஏற்பட்டது என தெரியவில்லை’ என்றார். இச்சம்பவம் தொடர்பாக, கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆயிரம் வாழைகளை வெட்டி பெண்கள் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Mettur ,Veerappan ,Kannammal ,Kolathur Upupkallur ,Mettur, Salem district ,Anandhi ,Mettur Government Hospital ,Palaniswami ,
× RELATED வீரப்பன் மகளுடன் பாமகவினர் வாக்குவாதம்