×

7 பேருக்கு பணி ஆணை

சென்னை: நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக வளாகக் கூட்டரங்கில் பிப்ரவரி மாத அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார்.

அப்போது, பதிவுத்துறையில் பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார். இதில் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பங்கேற்றனர்.

The post 7 பேருக்கு பணி ஆணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nandanam Integrated Commercial Tax and Registry Office Campus Partnership ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...