×

இஎஸ்ஐசி நிறுவன நிகழ்ச்சியில் சென்னை, நெல்லை நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்: ஒன்றிய அமைச்சர் வழங்கினார்

சென்னை: இஎஸ்ஐசி நிறுவன நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட சென்னை மண்டல அலுவலகம், நெல்லை துணை மண்டல நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழை ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் வழங்கினார்.
கடந்த 24ம் தேதி டெல்லி விக்யான் பவனில் நடந்த 73வது இஎஸ்ஐசி நிறுவன தின நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட மண்டல அலுவலகம், துணை மண்டல அலுவலகம் மற்றும் டிசிபிஓக்கள் உள்பட கிளை அலுவலகங்களுக்கு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பரிசுகளை வழங்கினார். மண்டல அலுவலகம் சென்னை மற்றும் துணை மண்டல அலுவலகம் நெல்லை ஆகியவை முறையே பெரிய பிரிவில் சிறப்பாக செயல்பட்ட மண்டல அலுவலகமாகவும், சிறிய பிரிவில் சிறப்பாக செயல்பட்ட துணை மண்டல அலுவலகமாகவும் விருது பெற்றன.

அதன்படி அமைச்சர், பெரிய பிரிவில் சிறப்பாக செயல்பட்ட மண்டல அலுவலகம் விருதிற்கான கேடயம் மற்றும் சான்றிதழை சென்னை கூடுதல் ஆணையர், மண்டல இயக்குநர் கிரண்குமாரிடம் வழங்கினார். கூடுதலாக சிறிய பிரிவில் சிறப்பாக செயல்பட்ட துணை மண்டலம் விருதிற்கான கேடயம் மற்றும் சான்றிதழையும் சென்னை கூடுதல் ஆணையர், மண்டல இயக்குநர் கிரண்குமார் மற்றும் நெல்லை, துணை மண்டல அலுவலகம், துணை இயக்குநர் ஸ்ரீ.எஸ்.விஜயனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் ஆர்த்தி அஹூஜா, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், தலைமை இயக்குநர் ராஜேந்திர குமார் உடன் பிற முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவ்வாறு இஎஸ்ஐ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post இஎஸ்ஐசி நிறுவன நிகழ்ச்சியில் சென்னை, நெல்லை நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்: ஒன்றிய அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Chennai ,ESIC ,Bhupendra Yadav ,Chennai Zonal Office ,Nellie ,73rd ,Vigyan Bhavan, Delhi ,Paddy ,Dinakaran ,
× RELATED முதல்முறை வாக்காளர்கள் வேகமாக...