×

சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட பாக். அணு ஆயுத திட்டத்திற்கான சரக்குகளுடன் சிக்கிய கப்பல்: மும்பை துறைமுகத்தில் பறிமுதல்

மும்பை: சீனாவில் இருந்து கராச்சிக்கு செல்ல, அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தயாரிப்பு திட்டங்களில் தொடர்புடைய இரட்டை பயன்பாட்டு சரக்குகளுடன் வந்த கப்பல் மும்பை துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ராணுவ பயன்பாட்டு பொருட்கள் அனுப்பப்பட்ட சரக்குகளை இந்திய துறைமுக அதிகாரிகள் பறிமுதல் செய்யும் சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன. அந்த வகையில், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அணு ஆயுதம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்க பயன்படுத்தும் இரட்டை பயன்பாட்டு பொருட்கள் சரக்கு கப்பலில் அனுப்பப்பட்டிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் மும்பை நவா ஷேவா துறைமுகத்தில் சுங்க அதிகாரிகள் மால்டா நாட்டு கொடியுடன் கடந்த மாதம் 23ம் தேதி வந்த சரக்கு கப்பலை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில், இத்தாலி நிறுவனத்தின் தயாரிப்பான கம்ப்யூட்டர் நியூமரிகல் கன்ட்ரோல் மெஷின் (சிஎன்சி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக இந்த கருவியை வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களில் பயன்படுத்துவது வழக்கம்.

எனவே, பாகிஸ்தானில் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தயாரிப்பு திட்டங்களுக்காக இந்த சரக்குகள் சீன நிறுவனத்தில் இருந்து கராச்சிக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். சிஎன்சி கருவிகள், சர்வதேச ஆயுத கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் வருபவை. எனவே, 22,180 கிலோ எடையுள்ள இந்த சரக்குகளை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

The post சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட பாக். அணு ஆயுத திட்டத்திற்கான சரக்குகளுடன் சிக்கிய கப்பல்: மும்பை துறைமுகத்தில் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pak ,China ,Mumbai port ,MUMBAI ,Karachi ,Pakistan ,Dinakaran ,
× RELATED பாக்.கில் சரப்ஜித் சிங் கொலையில் தொடர்புடைய குற்றவாளி கொலை