×

நெல்லை கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்து நாளை முற்றுகை போராட்டம்

நெல்லை: நெல்லை கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்து நாளை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர். கூடங்குளத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிலம் கொடுத்தவர்கள், பொதுமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1999-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். உள்ளூர் மக்களை புறக்கணித்து நாளை நடத்தப்படும் தேர்வை அணுமின் நிலைய நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அணுமின் நிலைய தேர்வு மைய வளாகத்தை முற்றுகையிட்டு நாளை போராட்டம் அறிவித்துள்ளனர்.

The post நெல்லை கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்து நாளை முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Paddy Kudankulam ,nuclear station ,Nella ,Nella Khodankulam nuclear station ,Nellu Kodankulam nuclear station ,Dinakaran ,
× RELATED நெல்லை – சென்னை விரைவு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு