×

சென்னை கர்னாடிக் ரோட்டரி கிளப் நடத்திய சுகாதார உட்கட்டமைப்பு தொடர்பான கருத்தரங்கம்

சென்னை: சுகாதார உள்கட்டமைப்புக்கான வரைப்படம் என்ற தலைப்பில் 7வது சென்னை விரிவுரை தொடரை சென்னை கர்னாடிக் ரோட்டரி கிளப் சென்னை மெகாபோலிஸ் 2030 என்ற கருத்தரங்கை நடத்தியது. சுகாதார உள்கட்டமைப்புத் தலைநகராக சென்னை வளர்ந்து வருவது குறித்த கருத்துகளை முன்வைத்து, எதிர்காலத்தில் வளர்ந்து வரும் சுகாதார உள்கட்டமைப்பின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய வரைபடத்தை உருவாக்குவது தொடர்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் கருத்தரங்கில் இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலக் கிளை செயலாளர் கார்த்திக் பிரபு, டாக்டர் எழிலன் நாகநாதன், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினர், காவேரி மருத்துவமனை நிறுவனர்  மணிவண்ணன் செல்வராஜ், அபய குமார் ஸ்ரீஸ்ரீமால், பேராசிரியர் ஜெயலால்  மற்றும் பாலசுப்ரமணியம்  ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர். மருத்துவமனை, மருந்து, பயோ-மெடிக்கல், மருத்துவ தொழில்நுட்பம் போன்ற பல்வேறு சுகாதாரத் துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கர்னாட்டிக்கின் தலைவர் ஜிகர் சால்வா கூறுகையில், வரும் ஆண்டுகளில் சென்னை விரிவுரை தொடரை புதிய தலைப்புடன் கொண்டு நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கர்னாட்டிக் சார்பில்  டாக்டர் நவீன் சௌத்ரி இந்த கருத்தரங்கின் நடுவராக செயல்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

 

The post சென்னை கர்னாடிக் ரோட்டரி கிளப் நடத்திய சுகாதார உட்கட்டமைப்பு தொடர்பான கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : on Health Infrastructure ,Carnatic Rotary Club ,Chennai ,Carnatic Rotary Club of ,7th Chennai Lecture Series ,Infrastructure ,Chennai Megapolis 2030 ,Chennai Carnatic Rotary Club ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...