×

இலவச அரிசி வழங்கும் பைகளில் பிரதமர் மோடியின் படத்தை அச்சிடுவதற்கு ஒன்றிய அரசு ரூ.15 கோடி செலவு!!

டெல்லி : நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இலவச அரிசி வழங்கும் பைகளில் பிரதமர் மோடியின் படத்தை அச்சிடுவதற்கு ஒன்றிய அரசு ரூ.15 கோடி செலவிட்டு இருப்பது சர்ச்சையாகி உள்ளது. நாடு முழுவதும் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இத் திட்டத்தில் தானியங்களை வழங்குவதற்கு பிரதமர் மோடியின் படம் அச்சிடப்பட்ட பைகளை வாங்குவதற்காக ராஜஸ்தான், சிக்கிம், மிசோரம், மேகாலயா, திரிபுரா, மாநிலங்களில் உள்ள இந்திய உணவு கழகத்தின் மண்டல அலுவலகங்கள் ரூ. 15 கோடிக்கு ஒப்பந்த புள்ளிகளை இறுதி செய்துள்ளன.

சமூக ஆர்வலர் அஜய் போஸ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பெறப்பட்ட பதிலில் இந்த தரவுகள் கிடைத்துள்ளன. அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மோடி படம் பதித்த 10 கிலோ கொள்ளளவு கொண்ட பைகளுக்கு ரூ. 13 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 5 மாநிலங்கள் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள பல இந்திய உணவு கழக அலுவலகங்களும் பிரதமர் மோடியின் படம் அச்சிட்ட பைகளை கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், இலவச உணவு தானிய பைகளில் பிரதமர் மோடியின் படத்தை பதிக்க கோடி கணக்கில் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

The post இலவச அரிசி வழங்கும் பைகளில் பிரதமர் மோடியின் படத்தை அச்சிடுவதற்கு ஒன்றிய அரசு ரூ.15 கோடி செலவு!! appeared first on Dinakaran.

Tags : Union government ,PM Modi ,Delhi ,Lok Sabha elections ,Modi ,Garib Kalyan ,Anna Yojana ,Dinakaran ,
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...