×

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அறுசுவை உணவு: ஈ.தங்கராஜ் தொடங்கி வைத்தார்

 

திருப்பூர்,மார்ச்2:மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதனை வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈ. தங்கராஜ் தொடங்கி வைத்தார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ் ஏற்பாட்டிலும், அவரது தலைமையிலும் 15,வேலம்பாளையத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கபட்டது.

மேலும், அந்த குழந்தைகளுக்கு நோட்டுகள், பேனா புத்தகங்கள் மற்றும் பள்ளியில் உள்ள நூலகத்திற்கு முத்தமிழ் அறிஞர் பதிப்பகத்தின் ரூபாய் 2000 மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பகுதி கழக செயலாளர் ராமதாஸ், 1வது மாநகராட்சி மண்டல தலைவர் உமாமகேஷ்வரி,வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் எஸ்.ஆர். முத்துக்குமார்,தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ் ,

வடக்கு மாநகர பொறுப்புகுழு உறுப்பினர் சிட்டி வெங்கடாச்சலம்,வடக்கு மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் பார்த்திபன்,பகுதி கழக அவை தலைவர் குழந்தைவேல்,13வது வார்டு செயலாளர் செந்தில், துணை செயலாளர் நாராயண மூர்த்தி, பகுதி இளைஞரணி அமைப்பாளர் ராம்குமார்,துணை அமைப்பாளர் புருசோத்தம் உள்ளிட்ட கழக இளைஞரணி, மாவட்ட, மாநகர,பகுதி, வார்டு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

The post மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அறுசுவை உணவு: ஈ.தங்கராஜ் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : M. K. Stalin ,E. Thangaraj ,Tirupur ,Northern District Youth Run ,Thangaraj ,DMK ,Chief Minister ,M.K.Stal ,Tirupur North District ,E.Thangaraj ,
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...