×

‘வர்ணஜாலம்’ மாபெரும் ஓவியப்போட்டி

திருச்சி, மார்ச் 2: சூரியன் பண்பலை 93.5 மற்றும் திருச்சி சாரதாஸ் நடத்தும் ‘வர்ணஜாலம்’ என்ற பிரமாண்டமான ஓவியப்போட்டி வரும் 10ம் தேதி தொட்டியம் சௌடாம்பிகா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெறவுள்ளது. மழலை செல்வங்களின் ஓவியத்திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவ -மாணவியரின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் நோக்கத்திலும் ‘வர்ணஜாலம்’ என்ற ஓவியப்போட்டியை சூரியன் பண்பலை தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த வகையில், வருகிற 10ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) திருச்சி மாவட்டம் தொட்டியம் சௌடாம்பிகா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் காலை 10 மணி அளவில் வர்ணஜாலம் ஓவியப்போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டிகளில் கேஜி முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவர்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகளும், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். குழந்தைகளின் ஓவியத்திறமையை வெளிப்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். முன்பதிவிற்கு 9952819935 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். போட்டியாளர்களுக்கு ஓவியம் வரைய ‘சாட்’ மட்டுமே வழங்கப்படும். ஓவியம் வரைய தேவையான மற்ற பொருட்களை போட்டியாளர்களே உடன் எடுத்து வரவேண்டும்.

The post ‘வர்ணஜாலம்’ மாபெரும் ஓவியப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Varnajalam ,Trichy ,Suriya Panpala 93.5 ,Trichy Saradas ,Thaniyam Saudambika Vidyalaya CBSE School ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...