×

எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார்

சென்னை: தமிழ்நாடு கேடர் 2011 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியும், தற்போது எல்காட் நிறுவன நிர்வாக இயக்குநராகவும் உள்ள அனீஷ் சேகர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் மதுரையில் ஆட்சியராக இருந்தவர். அப்போது சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவர். இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு நேற்று அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், “தனக்கு தனிப்பட்ட காரணங்கள் சில இருப்பதாகவும், அதனால் ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகுவதாக”வும் அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து அவரது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.
அனீஷ் சேகர் தனது சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளது ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் appeared first on Dinakaran.

Tags : Anish Shekhar ,Elcott ,CHENNAI ,Tamil Nadu ,Madurai ,Elcot Company ,Managing ,IAS ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...