×

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் 6 பயங்கரவாதிகள் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கைபர் பக்துங்க்வா மாகாணம் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தினர் விரைந்தனர். அங்கு, பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து ராணுவ வீரர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலடியாக பயங்கரவாதிகளும் தாக்குதல் நடத்தினர்.

ராணுவத்தினர் நடத்திய தாக்குலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பயங்கரவாதிகளின் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் படுகாயமடைந்தார். அவரை மீட்பு படையினர் மீட்டு அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.

The post பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் 6 பயங்கரவாதிகள் பலி appeared first on Dinakaran.

Tags : Pakistan Army ,ISLAMABAD ,Pakistan ,North Waziristan ,Khyber Pakhtunkhwa ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை:...