×

பைக் மீது கார் மோதி 3 வாலிபர்கள் பலி

நெல்லை: நாங்குநேரி அருகே பைக் மீது கார் மோதியதில் சகோதரர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ரங்க ராஜபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் மகேஷ் (27). மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அவினாப்பேரியை சேர்ந்த பழனி மகன்கள் மாலைராஜா (20), சண்முகவேல் (18). இவர்கள் 3 பேரும் நாங்குநேரி அருகே உள்ள நெடுங்குளத்தில் தோட்டம் ஒன்றில் வேலை செய்து வந்தனர். நேற்று இரவு 9.30 மணியளவில் நாங்குநேரி பகுதியில் உணவு அருந்திவிட்டு மூன்று பேரும் ஒரே பைக்கில் நெடுங்குளம் நோக்கி சென்றனர்.

அவர்கள் நாங்குநேரி அருகே உள்ள தாளைகுளத்தில் நான்கு வழி சாலையை கடக்க முயன்றனர். அப்போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சொகுசு கார், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக் உடைந்து நொறுங்கியது. அதே நேரத்தில் காரின் முன்பகுதியும் சேதமடைந்தது. இந்த விபத்தில் மகேஷ் மற்றும் மாலை ராஜா ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்து போலீசார் வந்து காயமடைந்த சண்முகவேலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சண்முகவேல் இறந்தார்.

The post பைக் மீது கார் மோதி 3 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Nella ,Nanguneri ,Subramanian ,Ranga Rajapuram ,Nella District Nanguneri ,Mahesh ,Avinaperi ,Harakaripatti ,Dinakaran ,
× RELATED நெல்லை – சென்னை விரைவு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு