×

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கத் தடையில்லை: உச்சநீதிமன்றம்

டெல்லி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரிக்க தடை கோரிய ஓபிஎஸ் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. தகுதியின் அடிப்படையிலேயே தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்குகளை விசாரிக்கிறார் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

 

The post ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கத் தடையில்லை: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Madras High Court ,Judge ,Anand Venkatesh ,Chief Minister ,O. Panneerselvam ,Dinakaran ,
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு