×

மரக்கடை, விறகுபேட்டை பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து

 

திருச்சி, மார்ச் 1: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மரக்கடை, விறகுபேட்டை பகுதிகளில் நாளை ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து ஜோசப் கல்லூரி வளாகத்தின் வழியாக செல்லும் குடிநீர் உந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து பராமரிப்பு பணி இன்று (மார்ச் 1) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் மரக்கடை, விறகுபேட்டை ஆகிய பகுதிகளில் நாளை (மார்ச் 2) ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது. மீண்டும் நாளைமறுநாள் (மார்ச் 3) வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். போலி விதை மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post மரக்கடை, விறகுபேட்டை பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Marakadi ,Virakupet ,Trichy ,Corporation Commissioner ,Saravanan ,Trichy Corporation ,Kamparasampet ,Water Works Station ,Joseph College Campus ,
× RELATED திருச்சியில் போலி மது பாட்டில்கள் பறிமுதல்..!!