×

வலங்கைமான் ஒன்றியத்தில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை நிகழ்ச்சி: அரசு திட்டங்களை விளக்கி எல்இடி பிரசாரம்

 

வலங்கைமான், மார்ச் 1: வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவூர் உள்ளிட்ட பகுதிகளில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை நிகழ்ச்சியும், தமிழ்நாடு முதலமைச்சரின் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக எல்இடி திரையின் வாயிலாக பிரசாரமும் நடைபெற்றது.

தமிழ்நாடு முதல்வரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம் எல் ஏ ஆகியோரின் ஆலோசனையின் படி, வலங்கைமான் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவூர், கோயிந்தகுடி ஆகிய பகுதிகளில் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் முன்னிலையிலும், வலங்கைமான் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலங்குடி, அரித்துவாரமங்கலம் ஆகிய பகுதிகளில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது.

இதேபோல வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் நகர செயலாளர் சிவனேசன் முன்னிலையில் கடைவீதி மற்றும் மாரியம்மன் கோயில் பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக எல்இடி திரையின் வாயிலாக பிரசாரம் நடைபெற்றது. முன்னதாக வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.  இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post வலங்கைமான் ஒன்றியத்தில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பரப்புரை நிகழ்ச்சி: அரசு திட்டங்களை விளக்கி எல்இடி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Stalin ,Union ,Valangaiman ,Aaur ,Valangaiman Union ,Tamil Nadu ,Chief Minister ,Dinakaran ,
× RELATED வலங்கைமான் பகுதியில் வேகமாக குறைந்து...