×

வேலூர் மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு

வேலூர், மார்ச் 1: வேலூர் மத்திய சிறையில் 650க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்னர். இதில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ராமசந்திராபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பன்(53). இவர் கடந்த 2016ம் ஆண்டு குடிப்போதையில் கொலை செய்த வழக்கில் உமராபாத் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஐயப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிறைதுறை காவலர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஐயப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் உயிரிழந்த கைதி ஐயப்பனின் உடல் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

The post வேலூர் மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vellore Central Jail ,Vellore ,Ayyappan ,Ambur Ramachandrapuram ,Tirupathur district ,Umarabad police ,
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை