×

போத்தீஸ் நிறுவனர் காலமானார்

சென்னை: போத்தீஸ் நிறுவனத்தின் நிறுவனர் கே.வி.பி.சடையாண்டி மூப்பானார் நேற்று காலமானார். தமிழகத்தில் பிரபலமான ஆடை விற்பனை நிறுவனம் போத்தீஸ். இதன் நிறுவனர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கே.வி.பி சடையாண்டி மூப்பனார் (83). இவர் போத்தீஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடையும், போத்தீஸ் சொர்ணமகால் என்ற பெயரில் நகைக்கடையும் நடத்தி வந்தார். இந்நிலையில், சடையாண்டி மூப்பனார் நேற்று காலமானார். பண்பில் செழித்து, அன்பில் நிறைந்து, தொழிலில் சிறந்து விளங்கிய சடையாண்டி மூப்பனார் மறைவால் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர். சடையாண்டி மூப்பனார் மறைவையொட்டி போத்தீஸின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவருடைய இறுதி ஊர்வலம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கூனாங்குளம் வடக்கு தெருவில் வைத்து இன்று மாலை நடைபெறுகிறது.

The post போத்தீஸ் நிறுவனர் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Boethys ,Chennai ,Botheis Company ,K. V. B. Satyandi ,Pothees ,Tamil Nadu ,K. ,Virudhunagar district ,Srivilliputur ,V. B Satyandi ,Potheis ,Botheis ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்