×

அம்பேத்கர் கலை கல்லூரியில் மெகா வேலை வாய்ப்பு முகாம்

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கல்லூரி சார்பில் மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் 15க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து சுமார் 2,580 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். 38 நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டு தங்கள் கம்பெனிக்கு தேவையான நபர்களை தேர்ந்தெடுத்தனர்.

இதில் பல்வேறு துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் மாணவர்களுக்காக வழங்கப்பட்டன. 302 மாணவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டன. மேலும் 720 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த நேர்முகத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கல்லூரி முதல்வர் வேலு பிரகாஷ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன், வேலைவாய்ப்பு வழிகாட்டி காரல் சின்னு உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.

The post அம்பேத்கர் கலை கல்லூரியில் மெகா வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Mega Placement Camp ,Ambedkar College of Arts ,Perambur ,Ambedkar Arts College ,Tamil Nadu Skill Development Corporation ,Dinakaran ,
× RELATED ஓட்டேரி பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை: சிறுவன் உட்பட 3 பேர் கைது