×

சென்னை மாநகர காவல் துறையில் கூடுதல் துணை கமிஷனர் உட்பட 30 காவல் அதிகாரிகள் பணி ஓய்வு: நேரில் அழைத்து கமிஷனர் பாராட்டு

சென்னை: சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் அனைவரையும் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து கவுரவித்து வருகிறார். அந்த வகையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனராக பணியாற்றிய ஜெயசிங், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் அசோக்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், வெங்கடேசன், 10 உதவி ஆய்வாளர்கள், 13 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 1 தலைமை காவலர், 1 இளநிலை உதவியாளர், 1 அலுவலக உதவியாளர் என மொத்தம் 30 பேர் நேற்று பணி ஓய்வு பெற்றனர்.

ஓய்வு பெற்ற கூடுதல் துணை கமிஷனர் உட்பட 30 பேரை, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தனது அலுவலகத்திற்கு நேற்று அவர்களின் குடும்பத்துடன் அழைத்து, சால்வை அணிவித்து, பாராட்டி சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில் குமாரி, தலைமையிட இணை கமிஷனர் கயல்விழி, நிர்வாக பிரிவு துணை கமிஷனர் சீனிவாசன், தலைமையிட துணை கமிஷனர் மணிவண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post சென்னை மாநகர காவல் துறையில் கூடுதல் துணை கமிஷனர் உட்பட 30 காவல் அதிகாரிகள் பணி ஓய்வு: நேரில் அழைத்து கமிஷனர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Police Department ,Chennai ,Sandeep Rai Rathore ,Jayasingh ,Chennai Central Crime Branch ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...